அட... திருமண வைபவத்தில் குங்குமத்தை மறந்த உறவுகள்.... பிளிங்க் இட் இன்ஸ்டண்ட் டெலிவரி!
டெல்லியில் நடந்த திருமண நிகழ்வில், மணமக்கள் குடும்பம் குங்குமம் ஒன்றை மறந்து வந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் சில நொடிகளில் பிளிங்கிட் இன்ஸ்டண்ட் டெலிவரி அந்த இடத்தில் குங்குமத்தை கொண்டு வந்து, திருமண சடங்குகளை மீண்டும் சீராக நடக்கச் செய்தது.
மணமகள் பூஜா மற்றும் மணமகன் ஹ்ரிஷி குங்குமம் இல்லாமல் சற்று குழம்பிய தருணத்தில், டெலிவரி ஊழியர் சரியான நேரத்தில் வந்து அவசரத்தைத் தாண்டியவர் போல செயல்பட்டார். ஆர்டர் பண்ணியதும் நொடிக்கு நொடி அவரின் இடம் செயலியில் தெரிந்ததால், குடும்ப உறுப்பினர்கள் எதுவும் சிரமம் இல்லாமல் சடங்குகளை தொடர முடிந்தது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் விரைவில் வைரலாகி, டெலிவரி ஊழியர்களை “மௌனமான சூப்பர் ஹீரோக்கள்” என பாராட்டும் போக்கை உருவாக்கியுள்ளது. நவீன திருமணங்கள் மட்டுமல்ல, தினசரி வாழ்விலும் இன்ஸ்டண்ட் டெலிவரியின் முக்கியத்துவத்தை இது நன்கு காட்டுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
