பொங்கலுக்கு சொந்த வாகனங்களில் செல்வோர் இந்த பக்கமா போகாதீங்க ... காவல்துறை அறிவுறுத்தல்!

 
போக்குவரத்து
 

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து 34,087 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். வரும் 9 முதல் 14 வரை, தினசரி 2,097 பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து 22,797 பேருந்துகள், பிற ஊர்களில் இருந்து 11,290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து

சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் சேவை வழங்கப்படும். திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், புதுச்சேரி போன்ற நகரங்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து; பெங்களூரு, வேலூர் உள்ளிட்ட ஊர்களுக்கு கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மாதவரத்திலிருந்து இயக்கப்படும். 9ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் 10, கோயம்பேட்டியில் ஒரு முன்பதிவு மையமும் செயல்படும்.

போக்குவரத்து மாற்றம்

பொங்கல் விடுமுறை முடிந்து 16 முதல் 19ஆம் தேதி வரை, ஒட்டுமொத்தமாக 25,008 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கார் மற்றும் தனியார் வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, தாம்பரம், பெருங்களத்தூர் வழியை தவிர்த்து, ஓ.எம்.ஆர் வழியாக திருப்போரூர், கேளம்பாக்கம் சாலையை பயன்படுத்துமாறு போக்குவரத்து துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!