காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க வருபவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
நீதிமன்றம்
இந்தியா முழுவதும் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் எந்த குடிமகனும்  அவமதிக்கப்படக்கூடாது.  மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட  வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.    

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ரூ.13 லட்சம் மோசடியால் ஏமாற்றப்பட்ட பிறகு காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது ஏற்பட்ட அனுபவத்தை மையமாகக் கொண்டது. பணத்தை இழந்த நபர் அது குறித்த  புகார் அளிக்க காவல்நிலையம் வந்தபோது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்தது மற்றும் தன்னை தரக்குறைவாக நடத்தியதாக தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.  

டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!
புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம், சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சத்தை அபராதமாகப் பிடித்து அதனை சம்பந்தப்பட்டவருக்கு அளிக்கும்படி  தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.  இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேன்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு  தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் முடிவை முழுமையாக உறுதி செய்தனர். இது குறித்து மேலும் அவர்கள்   “ஒரு குடிமகன் புகார் அளிக்க காவல்நிலையம் சென்றால், அவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். இது அவரது அடிப்படை உரிமை. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21ன் படி, எந்த ஒருவரும் சட்டத்தின் விதிகளின்படி அல்லாமல், அவரது உயிர் அல்லது தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட முடியாது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!
இதன் அடிப்படையில், பொதுமக்களை அவ மரியாதை செய்யும் எந்த ஒரு அதிகாரியும் சட்டவழியில் பொறுப்பேற்க வேண்டியது அவசியம் என நீதிமன்றம் கூறியுள்ளது.  இந்த தீர்ப்பின் படி  காவல்துறையின் பொறுப்பு மற்றும் மக்களுக்கு அவர்கள் உரிய மரியாதையை அளிக்க வேண்டிய கடமையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web