பகீர் சிசிடிவி காட்சிகள்!! வணிக வளாக தீவிபத்தில் 3 வது மாடியில் இருந்து குதித்தவர்கள் படுகாயம்!!

 
3 வது மாடியில் இருந்து குதித்த நபர்

 தலைநகர் டெல்லியின்  அருகே உத்திர பிரதேச  எல்லையில் அமைந்திருக்கும்  கிரேட்டர் நொய்டாவில் உள்ள கேலக்சி பிளாசா வணிக வளாகத்தில் 3 வது தளத்தில் நேற்று ஜூலை 13ம் தேதி பிற்பகலில் திடீரென தீப்பற்றியது.  மளமளவென தீ மற்ற தளங்களுக்கும் பரவத் தொடங்கியது. இந்நிலையில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க சிலர் 3வது தளத்தில் இருந்து கீழே குதிக்க முயற்சித்தனர். இச்சம்பவம் குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  கீழே குதித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


 


கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதும் அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட முதல் கட்ட தகவலில்   " இந்த வணிக வளாகத்தில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இந்த தீவிபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.   அவர்களில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என தெரிவித்துள்ளார். அத்துடன்  மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ உடனடியாக  அணைக்கப்பட்டது.


"இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை" என தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியான வீடியோவில்   கண்ணாடிக் கவசத்தில் இருந்து அடர்ந்த புகை வெளியேறுவதையும், தீயில் இருந்து தப்பிப்பதற்காக ஜன்னலில் இருந்து கீழே குதிக்க முயற்சிப்பதும் பதிவாகியுள்ளது. அத்துடன் ஒருவர்  3 வது தளத்தில் இருந்து குதிப்பதையும் காட்டுகிறது. மத்திய நொய்டா காவல்துறையின் துணை ஆணையர் ”  வணிக வளாகத்தில் தீப்பிடித்ததும்  உள்ளூர்வாசிகள் 3வது மாடியில் இருந்து குதிக்க முயன்றவர்களுக்கு தரையில் மெத்தைகளை வைத்து உதவி செய்துள்ளனர் இதனால் தலையில் அடிபடவில்லை. எனக் கூறியுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web