திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... தமிழ்ப் புத்தாண்டு தரிசனம்!

 
திருச்செந்தூர் வைர வேல்முருகன்

தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. 

திருச்செந்தூர் கந்தசஷ்டி

மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், கடல் மற்றும் நாலு கிணற்றில் புனித நீராடிவிட்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

திருச்செந்தூர்

அதிகமான பக்தர்களின் வருகையையொட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பழனி, மருதமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முருகன் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web