திருவையாறில் ஆயிரக்கணக்கில் குவிந்த இசைக் கலைஞர்கள்... இன்று தியாகராஜர் ஆராதனை - ‘பஞ்சரத்ன கீர்த்தனை’.. தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!

 
திருவையாறு தியாகராஜர்  ஆராதனை

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் குவிந்துள்ளனர். இன்று தியாகராஜர் ஆராதனை நடைபெறுகிறது.

கர்நாடக இசையுலகின் மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா, திருவையாறு காவிரி கரையில் கடந்த 3ம் தேதி கோலாகலமாக தொடங்கிய நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான 'பஞ்சரத்ன கீர்த்தனை' ஆராதனை விழா இன்று ஜனவரி 7ம் தேதி காலை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவார்கள்.

திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை

இசை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விழாவில் சிரமமின்றி பங்கேற்பதற்காக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்: 

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் ஜனவரி 24-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாகச் செயல்படும்.

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், நாளை மாவட்டக் கருவூலங்கள் மட்டும் அவசரப் பணிகளுக்காகக் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை

கடந்த சில நாட்களாகவே காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இடைவிடாது இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெறும் பஞ்சரத்ன கீர்த்தனை ஆலாபனை உலகெங்கிலும் உள்ள இசைப் பிரியர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் நிகழ்வாகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!