தாயும், மகளும் தீக்குளிக்க முயற்சி !! கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!!

திருநெல்வேலி மாவட்டம் திருத்துப்பகுதியில் வசித்து வருபவர் இசக்கியம்மாள். இவரது மகள் வெயிலாட்சிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் வெயிலாட்சி கணவர் இல்லாததால், அவர் தனது குழந்தைகளுடுன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இதனிடையே இசக்கியம்மாள் தனக்கு சொந்தமான சொத்துக்களை, தனது மகன், மகள்க்கு பிரித்து தருவதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். இதற்கு அவரது மகன் முத்தையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சொத்துக்களை பிரித்து யாருக்கும் கொடுக்கக் கூடாது, அனைத்து சொத்துக்களும் எனக்கு தான் என இசக்கியமாளிடம் முத்தையா அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இசக்கியம்மாளுக்கு கொலை மிரட்ட விடுத்த முத்தையா மீது நடவடிக்கை எடுகக்கோரி, தாயும், அவரது மகளும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அப்போது தங்கள் கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணைய் எடுத்து இசக்கியம்மாள் அவரது மகள் வெயிலாட்சி ஆகிய இருவரும் தங்கள் மேல் ஊற்றிக் கொண்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் இருவரையும் மீட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றி பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் இசக்கியம்மாளின் மகன் , மகள் மூவரையும் வைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க