பாஜக எம்எல்ஏ மீது மனைவி புகார்!! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
எல்லம்மாள்

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக கல்யாண சுந்தரம் உள்ளார். இவருக்கும் சென்னையை சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண்ணுக்கும் 2008ஆம் ஆண்டு வடபழனி முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. ஆனால், இந்த திருமணம் கல்யாணசுந்தரம் பெற்றோர் எதிர்ப்பை மீறி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு கல்யாணசுந்தரமும் எல்லம்மாளும் சேர்ந்து வாழ்ந்ததில் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் முதல் மனைவி இருக்கும் போது அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் இரண்டாவது கல்யாணசுந்தரம் எம்எல்ஏ திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணம் முதல் மனைவிக்கு தெரியவரவே அவருடன் எல்லம்மாள் அவருடன் சண்டையிட்டு இருந்தார். அப்போது முதல் மனைவி எல்லம்மாளை சமாதானம் செய்து, அவரை சென்னையில் தனி வீட்டில்ல தங்கவைத்தார். சமாதானம் பேசி அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று வந்ததால் மீண்டும் கல்யாண சுந்தரத்திற்கும் எல்லம்மாளுக்கும் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
 எல்லம்மாள்
இந்த நிலையில், எல்லம்மாள் புதுச்சேரியில் உள்ள கல்யாண சுந்தரத்தின் வீட்டின் முன் தனது குழந்தைகளுடன் போராட்டம் நடத்தினார். தொடர்ந்து கல்யாண சுந்தரத்தின் மேல் காவல்துறையில் புகார் அளிக்கச் சென்றார். அப்போது காவல்துறையினர், கல்யாண சுந்தரம் வீடு அமைந்துள்ள பகுதிக்கு வேறு காவல்நிலையம் செல்ல வேண்டும் எனக் கூறி எல்லம்மாளை அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து எல்லம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது, எனக்கு பெண் குழந்தை பிறந்து மூன்று மாதம் இருக்கும்போது எனக்கு தெரியாமல் இங்கே ஒரு திருமணம் செய்து கொண்டார். இது தெரிய வந்து இதுகுறித்து கேட்டபோது என்னை நல்லபடியாக பார்த்துக் கொள்வதாக கூறி என்னை இங்கே அழைத்து வந்தார். இங்கு நான்கு வருடம் இருந்தேன். இதன் பின் இரண்டாவது மனைவி எனக்கு மிகுந்த தொல்லை கொடுத்தார். நான் இங்கிருந்து சென்றுவிட்டேன். இப்பொழுதும் எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஃபோன் செய்து அவரிடம் எதற்கு பேசுகிறீர்கள் என இரண்டாம் மனைவி மிரட்டுகிறார். 

எல்லம்மாள்

அவர் (கல்யாண சுந்தரம் ) என் நம்பரை ப்ளாக் செய்துவிட்டு என்னிடம் பேசாமல் இருக்கிறார். கடைசியாக சென்னைக்கு 18 ஆம் தேதி வந்தார். நான் வரமாட்டேன் நீ என்ன செய்ய முடியுமோ செய்துகொள் என்றார். நான் ஆளை வைத்து உன்னை காலி செய்துவிடுவேன் என சொல்கிறார். நான் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படுகிறேன். அவர் இங்கு வசதி வாய்ப்புடன் வாழ்கிறார். 

மாதம் 20 ஆயிரம் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். 4 வருடத்திற்கு முன் மீண்டும் பிரச்சனை வந்தது. அதில் இருந்து 25 ஆயிரம் கொடுத்தார். ஆனால் அவர், மாதம் 10 ஆயிரம்தான் தர வேண்டும். 25 ஆயிரம் தருகிறேன். கோர்ட்டுக்கு செல்ல வேண்டுமா நீ போ. நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார், எனக் கூறினார். இந்த விவகாரம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web