தவெக கொடியை அகற்றியதால் மிரட்டல் … 3 பேர் கைது!
திண்டுக்கல் பெரியமல்லணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (19). இவரது வீட்டில் கடந்த மூன்று தினங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரி (61), அவரது மகன் காளிதாஸ் (33), பெத்துராஜ் (30) ஆகியோர் தவெக கட்சி கொடியை கட்டியதாக கூறப்படுகிறது. வீட்டில் கட்டப்பட்ட அந்த கொடியை முருகன் நேற்று முன்தினம் அகற்றியுள்ளார்.

இதையடுத்து பாண்டீஸ்வரி மற்றும் காளிதாஸ், முருகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். கட்சிக்கொடியை ஏன் அவிழ்த்தாய் என மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் சாதி பெயரை கூறி அவதூறாக பேசியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முருகன் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டீஸ்வரி, பெத்துராஜ், காளிதாஸ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
