ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் பலி ... முதல்வர் ரூ3 லட்சம் நிவாரணத் தொகை அறிவிப்பு!

 
ஓடை
 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமம், வடக்குத் தெருவில்  அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். இந்த கோவிலில்  பொங்கல் மறுபூஜைக்காக நேற்று ஏப்ரல்14ம் தேதி மாலை  3.10 மணிக்கு  ஒலிபெருக்கி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வயரின் மீது மின்சார வயர் பட்டதில் ஒலிபெருக்கி அமைக்கும் பணியை மேற்கொண்ட காரிசேரி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து உயிரிழந்தார். 

ஆம்புலன்ஸ்

மேற்படி சம்பவம் இறந்த திருப்பதி அவர்களின் வீட்டிற்கு அருகில் நிகழ்ந்ததால் அவருடைய மனைவி லலிதா  மற்றும் பாட்டி பாக்கியம் இருவரும்  திருப்பதியை காப்பாற்ற முயன்றபோது மேற்படி இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர்களும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து முதல்வர் இரங்கல் பதிவையும், நிதி உதவியையும் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மின்சாரம் தாக்கி மூவர் பலியாகினர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். 

ஸ்டாலின்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், வடக்கு கொளக்குடி கிராமம், ஜாகிர் உசேன் நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல் ரஹ்மான் (வயது 13) த/பெ.சாதிக் பாஷா, முகமது ஹபில் (வயது 10) த/பெ. ஜாபர் சாதிக் மற்றும் உபையதுல்லா (வயது 9) த/பெ.முஜிபுல்லா ஆகிய மூன்று சிறுவர்கள் நேற்று (14.4.2025) மாலை 4,00 மணிக்கு  கொல்லிமலை கீழ் பாதி கிராம எல்லையில் உள்ள வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.  
இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா 3.லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் எனக்  கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web