'தஹ் லைஃப்’ படத்திற்கு தடை விதிக்க முடியாது ... உச்சநீதிமன்றம் பரபரப்பு!
இந்தியா முழுவதும் ‘தஹ் லைஃப்’ ஜூன் 5 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 1987ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன், தயாரிப்பாளா் மணிரத்னம் கூட்டணியில் இப்படம் உருவாக்கப்பட்டதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவானது. முன்னதாக, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய நடிகர் கமல்ஹாசன் ‘தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது’ என்றாா். இந்தக் கருத்து மூலம் கன்னட மொழியை கமல் சிறுமைப்படுத்திவிட்டதாக கன்னட அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்தன. இதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கா்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்கு மன்னிப்பு கேட்க கன்னட அமைப்புக்கள் வலியுறுத்திய நிலையில், மன்னிப்பு கேட்க கமல் மறுத்துவிட்டாா். இதனால், கா்நாடகாவை தவிா்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இப்படம் வெளியானது. ‘தஹ் லைஃப்’ திரைப்படத்தை கா்நாடகாவில் திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் முன்னதாக தெரிவித்தது. இந்நிலையில், கர்நாடகத்தில் தஹ் லைஃப் படத்தை வெளியிடுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று ஜூன் 17ம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது. திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறுவது உயர் நீதிமன்றத்தின் வேலை இல்லை. தணிக்கைச் சான்றிதழ் பெற்ற எந்தப் படத்தையும் வெளியிடுவதை தடுக்க முடியாது. தஹ் லைஃப் திரைப்படம் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். கர்நாடகத்தில் தஹ் லைஃப் படத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வியாழக்கிழமைக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என கூறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
