முட்புதருக்குள் இழுத்துச் சென்றேன்.... தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில் ரவுடி பகீர் வாக்குமூலம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் கடந்த 10-ஆம் தேதி பிளஸ்-2 மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை மாணவியின் உடலைப் பெறப்போவதில்லை எனப் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சுமார் 10 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (38) என்பவரைப் பத்து தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்த காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ரவுடி தர்ம முனீஸ்வரன் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலம் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. "சம்பவத்தன்று காட்டுப் பகுதியில் மாணவி தனியாகச் சென்றதைப் பார்த்தபோது எனக்குத் திடீரெனச் சபலம் ஏற்பட்டது. அவரைப் பின்தொடர்ந்து சென்று வலுக்கட்டாயமாக முட்புதருக்குள் இழுத்துச் சென்றேன். அங்கு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தேன். அவர் கூச்சலிடவே, பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில் அவரை அங்கேயே அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றேன்" எனத் தனது வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளி தர்ம முனீஸ்வரன் ஒரு சாதாரண நபர் அல்ல; அவர் ஏற்கனவே 2022-ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, கடந்த டிசம்பர் மாதம்தான் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையிலிருந்து வந்த சில மாதங்களிலேயே மீண்டும் ஒரு பிஞ்சுயிரைப் பறித்த இந்தக் கொடூரனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள முனீஸ்வரனுக்கு எதிராகக் கடுமையான ஆதாரங்களைத் திரட்டி, உச்சக்கட்டத் தண்டனை பெற்றுத்தரப்படும் எனத் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உறுதி அளித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
