மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ. 200/-... பட்ஜெட் உரையின் முழு தகவல்கள் ஒரு அலசல்...!

அதன்படி கோயில் பூசாரிகளின் ஆண்டு சம்பளம், கர்நாடகா முழுவதும் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டது என கவர்ச்சிகரமான விஷயங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
அதன்படி:
தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் புதிய வணிகங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) கூடுதல் நிதி உதவிக்காக ரூ.3,500 கோடி
கோயில் பூசாரிகளின் ஆண்டு சம்பளம் ரூ. 60,000 லிருந்து ரூ.72,000 ஆக உயர்வு
ஜெயின் பூசாரிகள், சீக்கியர்களின் தலைமை மானியதாரர்கள் மற்றும் மசூதிகளின் பேஷ்-இமாம்களுக்கு வழங்கப்படும் கௌரவ சம்பளம் ரூ 6,000 ஆக உயர்வு.
குழந்தைகள் மையப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு ரூ. 62,033 கோடி ஒதுக்கீடு
தேசிய வெளிநாட்டு மாணவர் உதவித்தொகை ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும் .
விவசாயிகளுக்கு உதவ ரூ.20,000 கோடி ஒதுக்கீடு
பயிர் காப்பீடு திட்டங்களுக்கு ரூ.2,000 கோடி ஒதிக்கீடு.
கர்நாடகா முழுவதும் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ. 200 ஆக நிர்ணயம்.
பத்திரிகையாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 12,000- லிருந்து ரூ. 15,000- ஆக உயர்வு...
குடும்ப ஓய்வூதியம் ரூ. 6,000- லிருந்து ரூ. 7,500- ஆகவும் உயர்வு
பிராண்ட் பெங்களூரு திட்டத்தின் கீழ், ரூ. 413 கோடி செலவில் ‘விரிவான சுகாதாரத் திட்டம்’ செயல்படுத்தப்படும் .
பெங்களூரில் வடிகால் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் ரூ.3,000 கோடி
110 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய ரூ.555 கோடி
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை பெங்களூருக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 7,000 கோடியாக அதிகரித்துள்ளது .
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!