நீலகிரி தேயிலை தோட்டத்தில் காயங்களுடன் சுற்றித்திரிந்த புலி உயிரிழப்பு!

 
புலி

நீலகிரி மாவட்டம் போர்த்தி கிராமத்தில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில், கடந்த 3 நாட்களாகப் புலி ஒன்று காலில் காயங்களுடன் நடக்க முடியாமல் சோர்வாகக் காணப்பட்டது.

புலி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக வன அலுவலர் கவுதம் தலைமையில் வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட தெர்மல் டிரோன்கள் மூலம் புலியின் நடமாட்டத்தை இரவும் பகலுமாக வனத்துறையினர் கண்காணித்தனர்.

23 நாட்களுக்கு பிறகு பிடிபட்ட மசின குடி புலி!

புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, முதுமலை புலிகள் காப்பகத்திற்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லத் தயாராக இருந்தனர். நேற்று காலை டிரோன் மூலம் பார்த்தபோது புலி அசைவின்றி கிடந்தது. அருகில் சென்று பார்த்தபோது அது உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. உடற்கூறாய்வில் (Post-mortem) தெரியவந்த அதிர்ச்சிகரமான தகவல்கள்.

புலியின் முன்னங்கால்கள் உடைந்து சிதைந்து போயிருந்தன. கண்களிலும் பலத்த காயங்கள் இருந்தன. முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான ஆய்வில், இரண்டு புலிகளுக்கு இடையே எல்லைக்காக (Territorial Fight) நடந்த சண்டையில் இந்தப் புலிக்கு உள் காயங்கள் ஏற்பட்டு, அதனால் நடக்க முடியாமல் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலி

புலிகள் பொதுவாகத் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட எல்லையை வகுத்துக் கொள்ளும். அந்த எல்லைக்குள் மற்றொரு ஆண் புலி நுழையும்போது இது போன்ற உயிரிழப்பு நேரிடும் வரை மோதல்கள் நடப்பது வனப்பகுதியில் இயல்பான ஒன்று. நீலகிரி வனப்பகுதியில் தற்போது மனித-விலங்கு மோதல்களைக் குறைக்க AI கேமராக்கள் மற்றும் தெர்மல் டிரோன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் புலியைத் தொடக்கத்திலேயே கண்டறிய இது உதவியது.

உயிரிழந்த புலிக்கு முதுமலையிலேயே முறைப்படி தகனம் செய்யப்பட்டது. அங்கு தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இது போன்ற எல்லைச் சண்டைகள் அடிக்கடி நிகழ்வதாகத் தரவுகள் கூறுகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!