திக் திக் வீடியோ... 60 திமிங்கிலங்கள் ஒன்று கூடி பிக்மி ப்ளூ வேலை வேட்டையாடி துவம்சம்!

ஆஸ்திரேலியா நாட்டின் மேற்குக் கரையோரத்தில் பிரெமர் பே கடல்பரப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம் வைரலாகி வருகிறது. இது குறித்து வெளியான வீடியோவில் 60க்கும் மேற்பட்ட ஒர்கா வகை திமிங்கிலங்கள் ஒன்று கூடி, 18 மீட்டர் நீளமுள்ள பிக்மி ப்ளூ வேல் திமிங்கிலத்தை தாக்கியுள்ளன. உலகின் மிகப்பெரிய விலங்கான ப்ளூ வேலின் சிறிய இனமான இந்த பிக்மி வேல், அரிய வகை பாதுகாக்கப்படும் விலங்காகும்.
இந்த வீடியோவில் ஒர்காக்கள் அந்த பிக்மி வேலை பின்தொடர்ந்து துர்த்தியதால் அது மிகவும் களைத்துப்போய், பின்னர் பல வினாடிகளில் கொல்லப்பட்டதாக ‘நேச்சுரலிஸ்ட் சார்டர்ஸ்’ குழு தெரிவித்துள்ளது. இதே போல் சம்பவம் இது வரை 4வது முறை நடந்துள்ளது. ஒர்காக்கள் கூட்டமாகவே வாழும் உயிரினமாகவும், அதிகமாக வேட்டையாடும் தன்மையை கொண்டதாகவும் உள்ளன. கடல் வாழ் உயிரினங்களில் மிகவும் ஆபத்தான விலங்குகளாக இவை கருதப்படுகின்றன.
2024ல் இதே போல் பசிபிக் கடலில் வெயில் ஷார்க்குகளையும் ஒர்காக்கள் வேட்டையாடியது குறிப்பிடத்தக்கது. டால்பின் இனத்தைச் சேர்ந்த ஒர்காக்கள், மீன்கள், பென்குயின், கடற்கரை சிங்கம் இவைகளை உணவாக உண்கின்றன. ப்ளூ வேல், ஷார்க் போன்ற பெரிய உயிரினங்களையும் குழுவாக தாக்கி வேட்டையாடும் திறமை கொண்டவை
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!