திக் திக் வீடியோ... அடுக்குமாடி குடியிருப்பில் குளியலறையில் 6 அடி நீள பாம்பு…!

தினமும் சமூகவலைதளங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதில் சில வகையானவை வைரலாகி விடுகின்றன. அந்த வகையில்
கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் ஜே.பி. நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 6 அடி நீளமுடைய நாகப்பாம்பு ஒன்று குளியலறையில் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் அச்சத்துடன் வெளியேறினர்.
அத்துடன் பாம்பு பிடிப்பு நிபுணர் ரோஹித்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் , மிகுந்த துணிச்சலுடன் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை மீட்டார்.
It’s peak summer — snakes often seek cool, shaded corners in homes or compounds. If you spot one, don’t panic. Stay calm, don’t touch.
— BengaluruPost (@bengalurupost1) April 30, 2025
Call Rohit, a trained wildlife rescuer at 9964917651 or BBMP helpline 1533.⁰Here’s one such recent rescue — a 6ft cobra found in a home, safely… pic.twitter.com/VUqbKod1SM
இச்சம்பவம் குறித்து வைரலாகிய வீடியோவில், ரோஹித் ஒரு கொக்கி முனையுள்ள தடியைப் பயன்படுத்தி நாகப்பாம்பை மெதுவாக தூக்கி, அதன் வாலை கையால் பிடித்து, கருப்பு துணிப் பையில் பாதுகாப்பாக வைக்கிறார். இது குறித்த காட்சிகள் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பின், அந்த நாகப்பாம்பு காட்டுக்குள் பாதுகாப்பாக விடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. “ஒரு நாகப்பாம்பைக் கையாள சிறந்த முறையை காண்பித்தார்” என ஒருவர் கருத்து தெரிவித்தார். “10 மாத வைப்புத்தொகையுடன் நாகப்பாம்பு இப்போது வாடகை செலுத்த வேண்டும் போல இருக்கிறது” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!