அமெரிக்க நிறுவனத்திற்கு TikTok-ன் 80% பங்குகள் விற்பனை!
அமெரிக்காவில் TikTok செயலியை தடை செய்யும் அபாயம் நீங்கும் வகையில், சீனாவின் ByteDance நிறுவனம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. TikTok-ன் அமெரிக்கப் பிரிவில் உள்ள 80.1 சதவீத பங்குகளை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு விற்று ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 17 கோடி அமெரிக்க பயனாளர்கள் கொண்ட TikTok-ன் செயல்பாடுகள் முழுவதும் அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி, 2020-ல் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் TikTok தடை செய்யப்பட முயன்றது. பின்னர் பைடன் நிர்வாகத்தில் தடை தற்காலிகமாக விலக்கப்பட்டது. ஆனால் சீனாவுடனான உறவில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, TikTok தொடர்ந்து இயங்க உரிமை மாற்றம் அவசியமானது. அதற்கான தீர்வாகவே இந்த பங்கு விற்பனை ஒப்பந்தம் அமையப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, TikTok-ன் உலகளாவிய செயல்பாடுகள் ByteDance வசமே இருக்கும். ஆனால் அமெரிக்காவில் உள்ள தரவுகள், நிர்வாகம், செயல்பாடுகள் அனைத்தும் அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனை அமெரிக்க அரசு வரவேற்றுள்ள நிலையில், TikTok அமெரிக்காவில் தொடர்ந்து இயங்குவது உறுதியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
