பிரதமர் நரேந்திர மோடிக்கு திலகர் விருது !! மாறுமா தேர்தல் களம் ?

 
மோடி


மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த லோக மான்ய திலகர் நினைவு அறக்கட்டளை சார்பில், 1983ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், நாட்டுக்கு சேவை புரிந்தவர்களுக்கு லோகமான்ய திலகர் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங், உள்ளிட்ட பல பிரபலங்கள், இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள். விருதுடன் ரூபாய் 1 லட்சம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

மோடி


உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண் டுக்கான லோகமான்ய திலகர் தேசிய விருது வழங்கப்பட உள்ளது. புனேவில் உள்ள திலகர் மகாராஷ்டிரா பல்கலைக்கழக வளாகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி விழா நடைபெறும் என்று லோகமான்ய திலகர் நினைவு அறக்கட்டளை யின் தலைவர் டாக்டர் தீபக் திலக் அறிவித்துள்ளார்.

மோடி

மகாராஷ்டிரா ஆளுநர் ரமேஷ் பயஸ், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத்பவார், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட் னவிஸ், அஜித்பவார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநில அரசியல் மாற்றங்களால் அணி மாறியுள்ள தலைவர்கள் ஒரே மேடையில் சந்திப்பார்களா என்ற எதிர் பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web