கில், கோஹ்லியை பின்னுக்கு தள்ளி திலக் வர்மா அசத்தல் சாதனை!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தர்மசாலாவில் நேற்று இரவு நடந்த 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க வீரர்கள், இந்தியப் பந்துவீச்சின் துல்லியத்தால் திணறினர். அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் 117 ரன்களுக்குச் சுருண்டது. தென் ஆப்பிரிக்க தரப்பில் மார்க்ரம் அதிகபட்சமாக 61 ரன்களை எடுத்தார். இந்தியப் பந்துவீச்சாளர்களான ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
தொடர்ந்து, எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, மிகத் திறமையாக ஆடியது. இந்திய அணி 15.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. திலக் வர்மா 26 ரன்களுடனும், ஷிவம் துபே 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் இளம் வீரர் திலக் வர்மா, 24 ரன்களை எட்டியபோது ஒரு புதிய சாதனையைப் படைத்தார். அவர் தனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்தச் சாதனையை அவர் தனது 125-வது இன்னிங்ஸிலேயே எட்டியுள்ளார். இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 4,000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்தச் சாதனையில் ருதுராஜ் கெய்க்வாட் முதலிடத்தில் உள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
