ஜனவரி 1 முதல் புறநகர் ரயில்களில் நேர மாற்றம்… !

 
மின்சார ரயில்

சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சில ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் முன்கூட்டியே நேரத்தை கவனித்து பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மின்சார ரயில்

அதன்படி, திருத்தணி–சென்ட்ரல் ரயில் அரக்கோணத்தில் காலை 5.50க்கு பதிலாக 5.55க்கு வந்து சேரும். அரக்கோணம்–சென்ட்ரல் மின்சார ரயில் காலை 10க்கு பதிலாக 9.50க்கு புறப்படும். திருத்தணி–சென்ட்ரல் மற்றொரு ரயில் பிற்பகல் 2.40க்கு பதிலாக 2.55க்கு வந்து சேரும்.

ரயில் படிக்கட்டு

மேலும், கடற்கரை–கும்மிடிப்பூண்டி ரயில் இரவு 8க்கு பதிலாக 8.05க்கு புறப்படும். சூலூர்பேட்டை–சென்ட்ரல் ரயில் 9க்கு பதிலாக 9.05க்கும், கும்மிடிப்பூண்டி–சென்ட்ரல் ரயில் 9.25க்கு பதிலாக 9.40க்கும் புறப்படும். செங்கல்பட்டு–கடற்கரை ரயில்கள் மாலை 6.05, 6.30 மற்றும் இரவு 10.20 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!