எலான் மஸ்க் வெளியேற வேண்டிய தருணம் வரும்... ட்ரம்ப் அதிரடி!

 
எலான் மஸ்க், ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க்  முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் “டிபார்ட்மெண்ட் ஆஃப் கவர்ன்மெண்ட் எஃபிஷியன்சி”  துறையை தலைமையேற்று, அரசு செலவுகளைக் குறைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.  சமீபத்திய தகவல்களின்படி, எலான் மஸ்க் விரைவில் இந்த பதவியிலிருந்து விலக இருப்பதாக  கூறப்படுகிறது.

அதன்படி  எலான் மஸ்க் ஒரு “சிறப்பு அரசு ஊழியர்” என்ற முறையில் பணிபுரிந்து வருகிறார். இந்த பதவியில் உள்ளவர்கள் ஒரு வருடத்தில் அதிகபட்சம் 130 நாட்கள் மட்டுமே பணிபுரிய முடியும் என்ற சட்ட விதிமுறை அமெரிக்காவில் உள்ளது. இதன்படி, ட்ரம்பின் பதவியேற்பு நாளான ஜனவரி 20ம் தேதி முதல் கணக்கிட்டால், மஸ்கின் பதவிக் காலம் மே மாத இறுதியுடன் முடிவடைகிறது.  

அதனால், அவர் தனது பணியை முடித்துக்கொண்டு, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற தனது நிறுவனங்களை நிர்வகிக்க திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களுடனான உரையாடலில்  ,”எலான் மஸ்க் அற்புதமானவர், அவர் ஒரு தேசபக்தர். எனக்கு புத்திசாலி மக்களை பிடிக்கும், அவர் ஒரு புத்திசாலி நபர்.

ட்ரம்ப்

எனக்கு தனிப்பட்ட முறையில் அவரைப் பிடிக்கும். தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் அவசரப்படவில்லை. ஆனால், ‘எலான் மஸ்க் வெளியேற வேண்டிய ஒரு தருணம் வரும்’ என  அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். பத்திரிகையாளர் அவர் இன்னும் எவ்வளவு காலம் தங்கியிருப்பார் என்று கேட்டதற்கு, டிரம்ப், “சில மாதங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்” என பதில் அளித்துள்ளார். 
பின்னர் டிரம்பிடம், எலான் மஸ்க்கை நீண்ட காலம் அரசு பணியில் வைத்திருக்க, அவருக்கு வேறு ஒரு பதவியை ஒதுக்குவீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு ட்ரம்ப்  ஆம், “நான் விரும்புகிறேன். எலான் சிறந்தவர் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவருக்கு நடத்துவதற்கு பல நிறுவனங்களும் உள்ளன,” என பதில் அளித்துள்ளார்.  “எலான் முடிந்தவரை நீண்ட காலம் தங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” எனக் கூறியுள்ளார்.  இந்நிலையில்  அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் நேற்று எலான் மஸ்க் DOGEல் தனது தற்போதைய பொறுப்பை விட்டு வெளியேறிய பிறகும் டிரம்பின் “நண்பராகவும் ஆலோசகராகவும்” இருப்பார் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?