வாராந்திர சிறப்பு ரயில் நேர மாற்றம்... சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நகருக்கு வாராந்திர சிறப்பு ரயில் (03680) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கோவையில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.17 மணிக்கு சேலம் வந்தடையும்.
பின்னர் இங்கிருந்து புறப்பட்டு செல்லும். இந்நிலையில், இணைப்பு ரயில் வருவதில் தாமதம் காரணமாக இன்று பிப்ரவரி 18ம் தேதி செவ்வாய்க்கிழமை இந்த ரயில் 16 மணி நேரம் கால தாமதமாக கோவையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!