நடுவானில் அதிர்ச்சி…ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது வெடித்த டயர்!
சவுதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் நடுவானில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. கொச்சி அருகே பறந்தபோது விமானத்தின் லேண்டிங் கியரில் கோளாறு கண்டறியப்பட்டது. உடனே விமானி கோழிக்கோடு பயணத்தை கைவிட்டு, கொச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முடிவு செய்தார்.
கட்டுப்பாட்டு அறையின் அனுமதியுடன் விமானம் ஓடுபாதையைத் தொட்ந்த தருணத்தில், விமானத்தின் ஒரு டயர் திடீரென வெடித்தது. விமானத்தில் இருந்த 160 பயணிகள் பீதியடைந்தனர். ஆனால் முன்கூட்டியே எடுக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பெரும் விபத்தை தடுத்தன.
விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பஸ்களில் கோழிக்கோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டயர் வெடிப்பு மற்றும் தொழில்நுட்ப கோளாறு குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொச்சி விமான நிலையம் சில நேரம் பரபரப்பில் மூழ்கியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
