திருச்செந்தூர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்... ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்!

 
திருச்செந்தூர் முருகன் முருகர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகர்- வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு கோயிலிலிருந்து வள்ளியம்மன் தவசுக்கு புறப்பட்டாா். மாலையில் சாயரட்சை தீபாராதனையாகி, கோயிலிலிருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் சந்நிதித் தெரு வழியாக சிவன் கோயிலுக்கு வந்தாா். தொடா்ந்து, பந்தல் மண்டபம் முகப்பில் சுவாமி அம்மனை 3 முறை வலம் வந்ததும், சுவாமி-வள்ளியம்மன் தோள்மாலை மாற்றுதல் நடைபெற்றது.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

பின்னா், சுவாமியும், அம்மனும் வீதியுலா வந்து கோயிலை சோ்ந்தனா். இரவில் கோயிலில் 108 மகாதேவா் சந்நிதி முன் சுவாமி-வள்ளியம்மன் திருக்கல்யாணம் வைதீக முறைப்படி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று மொய் எழுதி பிரசாதம் பெற்றுச் சென்றனா். நேற்று சனிக்கிழமை பட்டணப் பிரவேசம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் சு. ஞானசேகரன், பணியாளா்கள் செய்திருந்தனா்.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி நாளை ஏப்ரல் 14ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீா்த்தவாரி, உச்சிகால அபிஷேகம், 10 மணிக்கு மேல் சண்முகருக்கு அன்னாபிஷேகம், மற்றகால பூஜைகள், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை, 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, மற்றகால பூஜைகள் நடைபெறுகின்றன.

திருச்செந்தூர் வைர வேல்முருகன்

கோயில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாகசுர இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9, 12 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவு, காலை 10 மணிக்கு பொது விவரக் குறிப்பேடு வெளியிடுதல் ஆகியவை நடைபெறும்.

பிற்பகல் 3 மணிக்கு இந்து தொடக்கப் பள்ளி, மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவா்-மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். சித்திரை மாதம் முழுவதும் திங்கள்தோறும் கோயில் உள்துறையில் தொடா் சொற்பொழிவு நடைபெறும் என, கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web