திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகளுக்கு வரதட்சணை கொடுமை... போலீசில் புகார்!

 
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகளுக்கு வரதட்சணை கொடுமை... போலீசில் புகார்!

திருநெல்வேலியில் பிரபல இருட்டுக்கடை அல்வா,  கடையின் உரிமையாளர் மகளுக்கு கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள இருட்டுக்கடை, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிஜிலி சிங் குடும்பத்தினரால், 1,900ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.இக்கடையில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரிவதால் இருட்டுக்கடை என பெயர் வந்தது. இக்கடையை தற்போது மூன்றாவது தலைமுறையாக கவிதா என்பவர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா மகள் கனிஷ்காவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த திருமணம் கோலாகலமாக நடந்த நிலையில், தனக்கு வரதட்சணை கொடுமை நேர்ந்து வருவதாக கனிஷ்கா தனது தாயுடன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

மேலும் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அந்தப் பெண்ணை கோவையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், அதன் மூலம் கணவருடன் தினமும் சண்டை ஏற்பட்டதாகவும் கனிஷ்கா தெரிவித்துள்ளார். 

தனது மகளின் எதிர்காலத்தைக் கருதி இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்து வந்த கவிதா சிங், பின்னர் பல்ராம் சிங் தொடர்ந்து வாட்ஸ்-அப்பில் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்டியதால், தனது உயிருக்கும், தனது பெற்றோருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக கனிஷ்கா தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா

எனவே தனது கணவர் பல்ராம் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவிதா சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலியில் பிரபலமான இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள வரதட்சணை புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web