திருநெல்வேலி நெல்லையப்பர் ஆனித் தேரோட்டம்!!

 
ஆனி தேரோட்டம்

தமிழகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற  சிவாலயங்களில் ஒன்று   நெல்லையப்பர் ஆலயம். இங்கு   நடைபெறும் விழாக்களில் ஆனித் தேரோட்டம்  மிகவும் சிறப்பு வாய்ந்தது .   நடப்பாண்டுக்கான ஆனித் திருவிழா ஜூன்  24ம்  தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் அனைத்து நாட்களிலும்   காலை, மாலையில் விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா சென்றனர்.  

ஆனி தேரோட்டம்

விழாவின் சிகர   நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் இன்று விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட நெல்லையப்பர் கோயில்  தேர்,  4 ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்து வலம் வருகின்றனர். அலைகடலென திரண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.   சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.  

திருநெல்வேலி நெல்லையப்பர்

மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள்  பலரும் தேரோட்டத்தில் கலந்துகொண்டனர்.   ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.   தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக  நெல்லை மாநகரகாவல் ஆணையர்   தலைமையில்,  சுமார் 1,000க்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web