நெல்லை - திருச்செந்தூர் ரயில்கள் ஏப்ரல் 18 வரை ரத்து... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 
ரயில்

நெல்லை ரயில் நிலையத்தில் பிட்லைன் புதுப்பிக்கும் பணிகள் காரணமாக ஏப்ரல் 18 வரை நெல்லை திருச்செந்தூர் இடையே ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட் லைன் புதுப்பிக்கும் பணி  ஏப்ரல் 18ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே நெல்லை திருச்செந்தூர் இடையே  ரத்து செய்யப்பட்ட 2 ரயில்களும் ஏப்ரல் 18ம் தேதி வரை மேலும் 5 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ரயில்

தென்னக ரயில்வேயின் அறிவிப்பின் படி, கடந்த மார்ச் 20ந் தேதி முதல் ஏப்ரல் 13ந் தேதி வரை  நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 2வது யார்டு பிட்லைன் தண்டவாளம்  புதுப்பிக்கும் பணி காரணமாக நெல்லை திருச்செந்தூர் இடையே 25 நாட்கள் 2 ரயில்கள்  முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

ரயில்

அதன் படி, திருச்செந்தூரில் இருந்து காலை 10:10 மணிக்கு நெல்லை செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 56004 மற்றும் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4:30 மணிக்கு திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 56003 ஆகிய 2 ரயில்களும் கடந்த 25 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது பணி நிறைவடையாத காரணத்தால்  18.04.25 அன்று மாலை 6.00 மணி வரையில் மேலும் 5 நாட்கள் இந்த 2 ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வேயின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web