நாளை பிப்ரவரி மாதத்திற்கான திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!
 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2026 பிப்ரவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்குமிட அறைகள் ஒதுக்கீடு ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணி முதல் முன்பதிவுக்கு திறக்கப்படுகின்றன. இந்த டிக்கெட்டுகளுக்கான மின்னணு   பதிவு 20-ந்தேதி காலை 10 மணி வரை செய்யலாம். 20 முதல் 22-ந்தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தியவர்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

திருப்பதி

மேலும், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஸ்ரீவாரி சாலகட்ல தெப்போற்சவம் ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகள் 21-ந்தேதி காலை 10 மணிக்கு கிடைக்கின்றன. அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 24-ந்தேதி காலை 10 மணிக்கு, ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கு, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான டோக்கன்கள் அன்றே மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 25-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன.

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

திருமலை–திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்குமிட அறைகள் 25-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவுக்கு திறக்கப்படுகின்றன. அனைத்து ஆர்ஜித சேவை, தரிசன மற்றும் தங்குமிட டிக்கெட்டுகளையும் பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ttdevasthanams.ap.gov.in மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!