திருப்பதி – சீரடி புதிய ரயில் சேவை… பக்தர்கள் வரவேற்பு!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கையை ஏற்று, திருப்பதி–சாய்நகர் சீரடி இடையே புதிய ரயில் சேவையை மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இரண்டு முக்கிய ஆன்மீக நகரங்களை இணைக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்த சேவை, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா வழியாக இயக்கப்படுகிறது. திருப்பதியில் நடைபெற்ற தொடக்க விழாவில் தென்மத்திய ரயில்வே அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கொடியசைத்து ரயிலை வழியனுப்பினர்.
Happy to share that the Tirupati ↔ Sainagar Shirdi new train service has been approved.
— Maddila Gurumoorthy (@GuruMYSRCP) December 8, 2025
My sincere thanks to Hon’ble Union Railway Minister Shri @AshwiniVaishnaw ji for promptly considering our request and sanctioning this much-needed service for devotees and passengers.
The… pic.twitter.com/52SgXrQCZE
17425 என்ற எண்ணில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருப்பதியில் புறப்படும் இந்த ரயில், ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், குண்டூர், செகந்திராபாத் வழியாக திங்கட்கிழமை காலை சாய்நகர் சீரடிக்கு சென்றடைகிறது. இதே ரயில் 17426 என்ற எண்ணில் சீரடியில் இருந்து திங்கட்கிழமை இரவு புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை திருப்பதிக்கு வந்து சேருகிறது. இதன் மூலம் திருப்பதி மற்றும் சீரடி செல்லும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து எதிர்காலத்தில் இந்த ரயிலை தினசரி சேவையாக மாற்ற பரிசீலிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். ஆந்திராவில் ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு விரைந்து நிலம் வழங்கி வருவதால் ரூ.36,000 கோடி மதிப்பிலான பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் பி.சி.ஜனார்தனன் தெரிவித்தார். புதிய ரயில் சேவை ஆன்மீக சுற்றுலாவுக்கும், பொதுமக்களின் வசதிக்கும் முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
