முதன்முறையாக சிஐஐ மாவட்ட தலைவராக பெண் நியமனம்!!

 
இந்திய தொழில் கூட்டமைப்பு

சி.ஐ.ஐ என அழைக்கப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் கிளை கடந்த 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது, தொழில் துறையினர் 84 பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் இந்த அமைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்திய தொழில் கூட்டமைப்பு

அந்தவகையில், சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட கிளைக்கு 2023 - 24ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, புதிய தலைவராக பி.கே.எஸ். டெக்ஸ்டைல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சங்கீதா நியமிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராக அகில் அப்பேரல் எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் இளங்கோ தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த புதிய நிர்வாகிகளுக்கு, முன்னாள் தலைவர் மில்டன் பதவிபிரமாணம் செய்துவைத்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு

திருப்பூரில் சி.ஐ.ஐ. கிளை தொடங்கப்பட்டு, பத்து ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக ஒரு பெண் தொழில்முனைவோர், கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web