சர்வதேச யோகா போட்டியில் தமிழக மாணவி முதலிடம்! குவியும் வாழ்த்துக்கள்!

 
ஜெயப்பிரீத்தா

ஜூன் 21ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்திய பிரதமர் மோடி  நியூயார்க்கில் ஐநா சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச யோகா நிகழ்வை தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். இதற்கான யோகா போட்டிகள் கடந்த மாதம் முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழகத்தில் திருப்பூரில் வசித்து வரும் கல்லூரி மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஜெயப்பிரீத்தா

இவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. சர்வதேச யோகா சாம்பியன் போட்டிகள்   தாய்லாந்தில் பாங்காக்கில் மே 29ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், இலங்கை, தாய்லாந்து, சீனா, பாகிஸ்தான் ட்பட 12 நாட்கள் கலந்து கொண்டன. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கலந்து கொண்ட நிலையில்  திருப்பூர்குமரன் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை ஆங்கிலம் இலக்கியம் படிக்கும் மாணவி ஜெயப்ரீத்தா நடன யோகா போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார்.

சர்வதேச யோகா தினம்

ஜெயப்ரீத்தா 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இவர் பதக்கத்தை தட்டி பறித்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து யோகா கலைஞர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.   வெற்றி பெற்ற மாணவிக்கு கல்லூரி முதல்வர் வசந்தி, நிர்வாக அலுவலர் நிர்மல் ராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர். தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web