"இனி ரிலீஸ் ஆன 8 வாரத்திற்கு பிறகே OTT-யில் புதுப்படம்" - திருப்பூர் சுப்ரமணியன் அறிவிப்பு!
திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள், திரையரங்குகளின் வருமானம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் விதமாக, இனிமேல் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகுதான் OTT தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்ற புதிய முடிவைக் கட்டாயமாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து ஆலோசிக்க, வரும் டிசம்பர் 9ம் தேதி காலை 10 மணிக்குக் காணொளிக் காட்சி வாயிலாகச் சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். திரையரங்குகளுக்கு ஏற்படும் தொடர் பிரச்சினைகள் குறித்துப் பேசிய திருப்பூர் சுப்ரமணியன், பல நகரங்களில் உள்ள சிறிய திரையரங்குகள் பாதிக்கப்பட்டு வருவதற்கான காரணங்களை அடுக்கினார்:

திரைப்படங்கள் 4 வாரங்களுக்குப் பிறகு மிக விரைவிலேயே OTT தளங்களில் வெளியாவதால், மக்கள் திரையரங்குக்குச் சென்று பார்ப்பதற்கு விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர். இதனால் திரையரங்க வருமானம் அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது. வளர்ந்து வரும் நடிகர்கள் கூட, ஒரு படம் வெற்றி அடைந்தாலே ரூ. 5 கோடி, ரூ. 10 கோடி என அதிக வருமானம் கேட்பதில் மும்முரமாக உள்ளனர். நல்ல படங்களை அடுத்தடுத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உள்ளனர்.
கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்கள் படம் தயாரிக்க முன் வந்தால், நடிகர்கள் அதிகப்படியான (ரூ. 100 கோடி - ரூ. 150 கோடி) சம்பளத்தைக் கேட்பதால், பல நிறுவனங்கள் படங்களை எடுக்காமல் கம்பெனியை இழுத்து மூடிவிட்டன. பல பெரிய நடிகர்களின் படங்கள் OTT வியாபார ஒப்பந்தங்களால் திரைக்கு வராமல் நிற்கின்றன.

இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் விதமாக, இனிமேல் திரைக்கு வரும் திரைப்படங்கள் 8 வாரங்களுக்குப் பிறகுதான் OTT-யில் வெளியாகும் என்ற உத்தரவாதம் கொடுத்தால் மட்டுமே திரையரங்குகளில் படத்தை வெளியிடுவோம் என்ற முடிவைச் சங்க நிர்வாகிகள் எடுக்க வேண்டும் என்று திருப்பூர் சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார். ஜனவரிக்குப் பிறகு தொடங்க உள்ள புதிய திரைப்படங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு கட்டாயம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
