திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ... 4 நாட்கள் கனரக வாகனங்கள் நுழையத் தடை!

 
கனரக

 

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு, மாநிலம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் வருகை தர உள்ளதால், நகரைச் சுற்றிய முக்கியச் சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 2ம் தேதி காலை 8 மணி முதல் 5ம் தேதி காலை 6 மணி வரை, வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை  வழியாகச் செல்லும் கனரக  மற்றும் இலகுரக  வாகனங்களுக்கு நுழைவு தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி அன்னமலையார் தரிசனத்திற்குச் செல்வதோடு, நகர போக்குவரத்தும் நெரிசலின்றி இயங்கச் செய்யும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

போக்குவரத்துத் துறையினர் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி —
பெங்களூரு/கிருஷ்ணகிரி/திருப்பத்தூரிலிருந்து — விழுப்புரம்/கடலூர்/புதுச்சேரி பயணிக்க வேண்டுமெனில் பர்கூர்–வாணியம்பாடி–வேலூர்–ஆற்காடு–செய்யாறு–வந்தவாசி மார்க்கமே திறந்திருக்கும். இதே வழித்தடத்திலிருந்தே திருப்புப்பயணமும் மேற்கொள்ள வேண்டும். ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விழுப்புரம்/கடலூர்/திண்டிவனம் திசையிலிருந்து பெங்களூரு–கிருஷ்ணகிரி மார்க்கத்துக்கு செல்லும் வாகனங்களும் வந்தவாசி–செய்யாறு–ஆற்காடு–வேலூர்–வாணியம்பாடி வழியாக மட்டுமே பயணிக்க வேண்டும்.

திருவண்ணாமலை

திருப்பதி/கே.ஜி.எப்/வேலூரிலிருந்து திண்டிவனம்–விழுப்புரம்–திருச்சி நோக்கிச் செல்லும் வாகனங்கள் வேலூரிலிருந்து ஆற்காடு–செய்யாறு–வந்தவாசி வழியாக மாற்றுப்பாதையை பயன்படுத்த வேண்டும். இதேபோல் திண்டிவனம்–விழுப்புரம்–திருச்சி பகுதியில் இருந்து வேலூர்–திருப்பதி நோக்கி செல்லும் வாகனங்களும் இதே மாற்றுப்பாதையைப் பின்பற்ற வேண்டும். மேலும் பெங்களூரு–திருப்பத்தூரிலிருந்து விருத்தாசலம்–சிதம்பரம்–நாகப்பட்டினம் பகுதிகளுக்கு செல்லும் லாரி, சரக்கு வாகனங்கள் மற்றும் LMV கார்கள் தர்மபுரி–தொப்பூர்–சேலம்–வாழப்பாடி–ஆத்தூர் வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு வருகை தரும் பக்தர்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றி நகரப் போக்குவரத்து செயல்படவும், இந்தத் தடைகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!