டிட்வா புயல் அலெர்ட்... நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு!
தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 29) நடைபெற இருந்த ஊரகத் திறனாய்வு தேர்வு, டிட்வா புயல் காரணமாக சகல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேர்வு புதிய தேதியாக டிசம்பர் 6, சனிக்கிழமை நடைபெறும் என அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.

1991-92 முதல் ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்விற்கு, 2025-26 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 4 ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 50 ஆண், 50 பெண் என மொத்தம் 100 பேருக்கு வருடத்துக்கு ரூ.1,000 வீதம் நான்கு ஆண்டுகள் உதவித்தொகை பெற வாய்ப்பு உள்ளது.
சென்னை தவிர்த்து, மாநிலம் முழுவதும் அரசு அங்கீகாரம் பெற்ற கிராம மற்றும் டவுன்ஷிப் பள்ளிகளில் பயிலும் 9ஆம் வகுப்பு மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்க தகுதி பெறுவர். வானிலை காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய தேதியில் தேர்வு நடைபெற உள்ளதால், மாணவர்கள் தயாரிப்பைத் தொடர அறிவுறுத்தப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
