வீட்டை விட்டு வெளியே வராதீங்க... டிட்வா புயலால் இந்தப் பகுதிகளுக்கு ரெட் அலெர்ட்!
வடமேற்கே நகரும் டிட்வா புயல் புதுச்சேரி கடலோரத்தை தாக்கக் கூடும் நிலையில், அடுத்த இரண்டு நாள்களுக்கு அவசியமில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளார். புயலின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், நிர்வாகம் முழு தயார்நிலையிலும், பொதுமக்கள் முன் எச்சரிக்கை நிலையில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அரக்கோணத்திலிருந்து 60 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு புதுச்சேரி வந்தடைந்து இன்று ஆலோசனையில் பங்கேற்றது. 312 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 112, 1070, 1077 ஆகிய எண்களுக்குத் தொடர்பு கொண்டு உதவி கோரலாம். கடலோரம் மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குழுக்கள் பிரிந்து பணியில் ஈடுபட உள்ளன; மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது எனவும் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

20 செ.மீ. வரை கனமழை ஏற்படலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. முன்பள்ளிக்களும் பொதுப்பணித் துறையின் சார்பில் 76 மோட்டார் பம்புகள், 46 ஜேசிபி இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை அதிகரிக்கக்கூடியதால், பால், பிரெட் போன்ற தேவைகளை முன்கூட்டியே வாங்கி வைத்து வீட்டிலேயே இருக்குமாறு ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
