டிட்வா புயல் துயரம்; இந்தியா இலங்கைக்கு ரூ.4,000 கோடி உதவி !
இலங்கையை இம்மாத தொடக்கத்தில் டிட்வா புயல் உலுக்கியது. 643 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். பல பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன.
Breaking: India announces ₹4000 crore aid package to help rebuild cyclone-hit Sri Lanka pic.twitter.com/phoqJQiOgF
— Shashank Mattoo (@MattooShashank) December 23, 2025
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா ‘ஆபரேஷன் சாகர் பந்த்’ திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இலங்கை சென்றார். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.4,000 கோடி நிதியுதவி வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் ரூ.3,000 கோடி கடனாக வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகை மறுசீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
