நாளை விஜய் மக்கள் சந்திப்பு... 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி!
தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி நடத்தி வரும் நடிகர் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் தொடக்கம் முதலே பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு சனிக்கிழமையும் மாவட்டங்களைச் சுற்றி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை அவர் நடத்தி வருகிறார். திருச்சியில் தொடங்கிய இந்த நிகழ்ச்சிகள் ரசிகர்கள் கூடிய ஆதரவால் கவனம் பெற்றன. இதன் தொடர்ச்சியாக கரூரில் செப்டம்பர் 27 அன்று நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட பேர்நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. கரூர் உயிரிழப்பாளர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில், விஜய் மாமல்லபுரத்தில் அவர்களை அழைத்து ஆறுதல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாமல்லபுரம் பொதுக்குழுக் கூட்டத்தில், விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என அறிவிக்கப்பட்டு, அதிமுக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இக்கூட்டத்திற்குப் பிறகு கட்சியின் செயற்பாடுகள் வேகமடைந்தன. தொண்டரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சேலத்தில் திறந்தவெளிக் கூட்டம் நடத்த அனுமதி கோரிய தகவலும் வெளியாகியது.
இந்த சூழலில், சேலத்திற்கு முன்பாக காஞ்சிபுரத்தில் விஜயின் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நாளை நடைபெற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், முன்கூட்டியே QR குறியீட்டுடன் வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டுகளை பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு. “வேறு யாருக்கும் அனுமதி இல்லை; கழகத் தோழர்களும் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்” என பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
