தமிழ்நாட்டின் சாபக்கேடு டூப் போலீசான அண்ணாமலை... அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்து அமைச்சர் சேகர்பாபு கடும் கண்டனப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை போன்றவர்கள் இருப்பது மிகப்பெரிய சாபக்கேடு. தேர்தலில் டெபாசிட்டை தக்கவைக்க போராடும் கட்சியை கண்டு திமுக ஏன் அச்சப்பட வேண்டும்.

தமிழ்நாடு காவல்துறை அண்ணாமலை போல் டூப் போலீஸ் இல்லை. நாட்டுக்காக போராடுவதாகக் கூறும் அண்ணாமலையால் 5 மணி நேரம் காவலில் இருக்க முடியவில்லை. எங்கள் முதல்வர் ஸ்டாலின் திருமணமான ஓராண்டிலேயே மிசாவில் கைதாகி சிறையில் இருந்தவர். அண்ணாமலை முதலில் உத்தரப்பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள முதலமைச்சரின் படத்தை அடித்து மாட்டட்டும்.

முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திற்கான நாளை அண்ணாமலை குறிக்கட்டும். காவல்துறையினரே இல்லாமல் திமுக தொண்டன் உங்களின் போராட்டத்தை தடுப்பான். தமிழ்நாட்டின் சாபக்கேடு டூப் போலீசான அண்ணாமலை” என விமர்சித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
