2026 ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியீடு - குரூப் 4, குரூப் 1 தேர்வுகள் எப்போது?

 
TNPSC குரூப் 1 ரிசல்ட் வெளியீடு!!

தமிழக இளைஞர்களுக்கு குட் நியூஸ். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), 2026 ஆம் ஆண்டு நடத்தவுள்ள பல்வேறு அரசுத் தேர்வுகளுக்கான ஆண்டுத் திட்ட அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

முக்கியத் தேர்வுகளுக்கான அட்டவணை விவரங்கள்
அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள முக்கியப் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு மற்றும் தேர்வு நடத்தப்படும் தேதிகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

குரூப் 1 தேர்வு (Group 1):

தேர்வு அறிவிப்பு: ஜூன் 26 ஆம் தேதி வெளியிடப்படும்.

முதல்நிலைத் தேர்வு: செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு (Group 2 & 2A):

தேர்வு அறிவிப்பு: ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியிடப்படும்.

முதல்நிலைத் தேர்வு: அக்டோபர் 20 ஆம் தேதி நடத்தப்படும்.

குரூப் 4 தேர்வு (Group 4):

தேர்வு அறிவிப்பு: அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடப்படும்.

தேர்வு நடத்தப்படும் நாள்: டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் புதிய மாற்றம்

தேர்வாணையம், இந்த அட்டவணையில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, அந்தந்தத் தேர்வுக்கான அறிக்கையில் மட்டுமே முழுமையாக வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளது.

அரசுத் துறைப் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் டிஎன்பிஎஸ்சி நிரப்பி வரும் நிலையில், இந்த முன்கூட்டிய அட்டவணை வெளியீடு தேர்வர்களுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!