டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் மகிழ்ச்சி... குரூப் 4 பணியிடங்கள் 5,307 ஆக அதிகரிப்பு!

 
TNPSC குரூப் 1 ரிசல்ட் வெளியீடு!!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப் 4 பதவிகளுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை மேலும் 645 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான மொத்தக் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5,307 ஆக அதிகரித்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3,935 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV (குரூப் 4) அறிவிக்கை கடந்த ஏப்ரல் 25, 2025 அன்று முதலில் வெளியிடப்பட்டது. பின்னர், செப்டம்பர் 26, 2025 அன்று கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை அறிவிப்பு வெளியானது.

இன்னும் ஒரு நாள் தான்... டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்பிக்க மறந்துடாதீங்க!

தற்போது இன்று (டிசம்பர் 3, 2025) மேலும் 645 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்தக் கூடுதல் அறிவிப்புகளின் மூலம், குரூப் 4 தேர்வுக்கான மொத்தக் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5,307 (3935 + 727 + 645) ஆக உயர்ந்துள்ளது.

2025-26 நிதியாண்டில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) 5,101 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன.

குரூப் தேர்வு டிஎன்பிஎஸ்சி

2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் சராசரியாக நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (சுமார் 3,560) ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டில் கூடுதலாகக் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!