டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு !
தமிழகம் முழுவதும் ஜூன் 15ம் தேதி குரூப் 1, 1ஏ தேர்வுகள் நடைபெறவுள்ள உள்ள நிலையில் தற்போது அதற்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தல்களை தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது.

இதன்படி, குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. இதன்படி, ஜூன் 15ல் இந்த பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும். துணை கலெக்டர், டி.எஸ்.பி. உட்பட 8 முக்கிய பதவிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில் ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1, 1ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpscexams.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்தால் ஹால்டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
