தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மைத் தேர்வுகள் தொடங்கியது!

 
குரூப் 2, 2ஏ தேர்வு

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தத் தேர்வுகள், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் வினாத்தாள் குளறுபடி காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் நடைபெற்று வருகின்றன.

இன்று பிப்ரவரி 22 ஞாயிற்றுக்கிழமை காலையில் குரூப்-2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான கட்டாயத் தமிழ் தகுதித்தாள் தேர்வும் நடைபெறுகின்றன. தேர்வு மையங்களுக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி

பிப்ரவரி 8ம் தேதி சென்னை அரும்பாக்கம் உள்ளிட்ட சில மையங்களில் பதிவெண் குளறுபடி ஏற்பட்டதால் தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து. இந்த குளறுபடிக்குக் காரணமான இரண்டு உதவிப் பிரிவு அலுவலர்கள், இரண்டு பிரிவு அலுவலர்கள் மற்றும் ஒரு சார் செயலாளர் என மொத்தம் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா ஐ.ஏ.எஸ். புதிதாகப் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று நடைபெறும் தேர்வுகளைத் தொடர்ந்து, குரூப்-2 பதவிகளுக்கான (நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகள்) முதன்மைத் தேர்வுகள் வரும் மார்ச் 15-ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி

இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் உள்ள 47 மையங்களில் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் எழுதி வருகின்றனர். பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் தேர்வுகள் நடைபெறுவதை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!