பயணிகளின் கனிவான கவனத்திற்கு ... ஆமதாபாத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்!

ஆமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளான நிலையில் தற்காலிகமாக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பயணிகளின் வசதிக்காக இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று பிற்பகல் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதுவரை 133 பயணிகள் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, ஆமதாபாத் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விமான விபத்து நடந்த பகுதியில் மேற்கு ரயில்வேவின் பேரிடர் மீட்புக் குழு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ரயில்வேயின் மருத்துவக் குழுவும் ரயில்வே காவலர்களும் மீட்புப் பணிக்காக சென்றுள்ளனர்.
தற்போது ஆமதாபாத்தில் இருந்து தில்லி மற்றும் மும்பைக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் ரயில்கள் ஆமதாபாத்தில் இருந்து இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!