பயணிகளின் கனிவான கவனத்திற்கு... மெட்ரோவில் மார்ச் 1 முதல் 10% தள்ளுபடி திட்டம் ரத்து!

 
 மெட்ரோ

சென்னையின் மிகப்பெரிய பொதுப்போக்குவரத்து சேவைகளில் குறிப்பிடத்தக்கது மெட்ரோ ரயில் சேவைகள் தான். அந்த வகையில் சென்னையில்  மெட்ரோ ரயில் அமைப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இது சென்னை மெட்ரோ ரயில் நகரத்தின் பல்வேறு பகுதிகளை இணைப்பதால், மக்கள் சென்னை முழுவதும் எளிதாகப் பயணிக்கலாம். மேலும், பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து, தினசரி பயணிகளுக்கு வசதியான தேர்வாக மெட்ரோ ரயில் உள்ளது.

மெட்ரோ ரயில்
போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் மெட்ரோ ரயில் சென்னை மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகிறது. அதேபோல், மெட்ரோ ரயில் கட்டுமான கட்டத்திலும் அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளிலும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேசமயம், மெட்ரோவில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் அவசரகால பதில் அமைப்புகள் உள்ளன. 

மெட்ரோ ரயில்
குறிப்பாக, பயணிகள் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. மெட்ரோ கார்டுகளை ரீசார்ஜ் செய்து பயணிக்கவும் முடியும். இந்நிலையில், 20 அல்லது அதற்கு மேற்பட்ட மெட்ரோ டிக்கெட்டுகளை காகித முறையில் வாங்கும்போது 10% தள்ளுபடி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், மார்ச் 1ம் தேதி முதல் இந்த திட்டம் நிறுத்தப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிஜிட்டல் முறையில் பயணிகள் டிக்கெட் வாங்குவதற்கான ஊக்கத்தை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.  அதே குழு பயணச்சீட்டை பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் 20% தள்ளுபடி கட்டணத்துடன் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?