ரயிலில் கடத்தி வந்த ரூ.1.62லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

 
ரயிலில் புகையிலை

தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வந்து நின்ற மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வந்த சுமார் ரூ.1.62லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி

மைசூர் - தூத்துக்குடி இரயில் வண்டியில் அசோக் மற்றும் மனோஜ் என்ற பெயரில் பார்சலை பெங்களூரிலிருந்து இரயிலில் புக் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தூத்துக்குடி இரயில் நிலையத்தில் 1வது நடைமேடையில் இரயில் வந்து நின்றதும் பார்சல் அலுவலக ஊழியர்கள், பெட்டியில் இருந்து பார்சலை இறக்கும் போது சந்தேகத்தின் பேரில் அலுவலகத்தில் இருந்த ஜிஆர்பி/ ஆர்பிஎப் காவலர்களிடம் இது குறித்து தகவல் அளித்தனர்.

ரயில்

இதையடுத்து போலீசார் பார்சலை சோதனை செய்து பார்த்த போது, பார்சலில் சுமார் 160 கிலோ கணேஷ் & கூல் லிப் புகையிலை இருந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.1,62,680 என உறுதிசெய்யப்பட்டது. அதனை உரிமை கொண்டாடி யாரும் வரவில்லை என்பதால் நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரியிடம் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே காவல் துறையினர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

2025ல் இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web