இன்று சென்னை குஜராத் அணிகள் மோதல் ! இறுதிப் போட்டிக்கு வெற்றி பெறப்போவது யார்?!

 
சென்னை குஜராத்

16வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது ஐபிஎல் சீசன் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. தொடரின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று சென்னையில் தொடங்க உள்ளது. இதில்  சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.  ஐபிஎல் போட்டிகளில்  நாளை எலிமினேட்டர் ஆட்டமும், மே 26ம் தேதி 2ம் தகுதி சுற்று ஆட்டமும், தொடரின் இறுதிப்போட்டி மே 28ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை குஜராத்

ஐபில் போட்டிகளில் மொத்தம்  10 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ்,  சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் , மும்பை இந்தியன்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றை எட்டிப் பிடித்தன. முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ்  அணிகள் வெளியேறிவிட்டன. புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடித்த அணிகளான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில்  விளையாட உள்ளன.  

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பாக  2வது தகுதி சுற்றில் விளையாட வேண்டும்.  டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றில் 8ல் வெற்றியும், 5ல் தோல்வியும் பெற்றுள்ளது.  உள்ளூரில் ஆடுவது சென்னை அணிக்கு சாதகமான விஷயமாகும். குஜராத் சென்னையுடன் ஒப்பிடும் போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் இதுவரை ஆடிய போட்டிகளில்  10 வெற்றி, 4 தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

 குஜராத் அணி, லீக்கில் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தகக்து. கடந்த ஆண்டில் 2 முறை சென்னையை தோற்கடித்தது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சூப்பர் பலத்துடன் வலம் வருவதால் சென்னை அணிக்கு நிச்சயம் கடும் சவால் காத்திருக்கிறது . இன்றைய ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர்.  


போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் 


சென்னை: 

சென்னை சூப்பர் கிங்ஸ்
கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), தீபக் சாஹர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, பதிரானா. 


குஜராத்:

சுப்மன் கில், விருத்திமான் சஹா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ஷனகா, ராகுல் திவேதியா, ரஷித்கான், யாஷ் தயாள், முகமது ஷமி, நூர் அகமது, மொகித் ஷர்மா. 


இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில்  நேரடியாக கண்டு களிக்கலாம் 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web