நாளை ஆனி மாத பெளர்ணமி... கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்!

 
திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கி வருவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம். உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பிற பகுதிகள்,   பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.  சாமி தரிசனத்துக்கு பின்னர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வது வழக்கம்.

திருவண்ணாமலை

சாதாரண நாட்களில் கூட கிரிவலம் செல்லலாம் என்ற போதிலும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்றால் வேண்டும் வரம் பெறலாம் என்பது ஐதீகம் இதனால் வழக்கமான தினங்களை காட்டிலும் பௌர்ணமி தினத்தில்  ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். குறிப்பாக கார்த்திகை தீபத்திருவிழா மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பௌர்ணமி  தினத்திலும்  லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வர்.  

திருவண்ணாமலை

அந்த வகையில் ஆனி மாத பௌர்ணமி இன்று  ஜூலை 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.42 மணிக்கு தொடங்கி நாளை திங்கட்கிழமை மாலை 5.46 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் சென்றால் கடவுளின் அருள் கிட்டும் என்கின்றனர் ஜோதிட அன்பர்கள். பக்தர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 சிறப்பு பேருந்துகளை  இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web