சவரன் ஒரு லட்சம் ரூபாயைக் கடந்து புதிய உச்சம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்ற இமாலய இலக்கைத் தாண்டி, இன்று (திங்கட்கிழமை) புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. நகைப்பிரியர்கள் மற்றும் முதலீட்டாளர்களை இந்தக் கடும் விலை உயர்வு கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ₹720 அதிகரித்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ₹440 உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, தற்போது ஒரு கிராம் தங்கம் ₹12,515-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹1,00,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வார இறுதியில் சவரனுக்கு ₹2,560 அதிரடியாக உயர்ந்து ₹98,960 என்ற உச்சத்தை எட்டியிருந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை காலையில் ₹720-ம், பிற்பகலில் மீண்டும் ₹440-ம் உயர்ந்து ₹1,00,120 என்ற வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் அபாரமாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் வெள்ளி ₹210-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை கிராமுக்கு ₹3-ம், பிற்பகல் ₹2-ம் அதிகரித்துள்ளது. இதனால் தற்போது ஒரு கிராம் வெள்ளி ₹215-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ₹2,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார நிலைமை மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாகத் தங்கம், வெள்ளி விலைகள் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
