தங்கம் அதிரடி உயர்வு!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
gold jewel actress sneha

சென்னையில்   ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ14 அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5550க்கும், சவரனுக்கு ரூ112 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,400க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை  உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு  கிராம் வெள்ளி விலை ரூ.81.40க்கும்,  ஒரு கிலோ வெள்ளி ரூ. 81,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold actress

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது.   அவை நாணய ஏற்ற இறக்கங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் போன்ற பிற காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான சேமிப்பு இல்லத்தரசிகள், முதலீட்டாளர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது அவசர, அவசிய கால கட்டத்தில் தங்க நகைகள் தான் உடனடி பணமாக்க முடியும் என்பதே இதற்கு காரணம். 

தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு. அமெரிக்க  பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய பங்கு சந்தைகளிலும் அதன் எதிரொலியாய் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. 

தங்கம்

இந்நிலையில், பலரும் பாதுகாப்பு கருதி தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பியிருப்பதால், இப்போதைக்கு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் நிகழாது எனவும், தங்கத்தின் விலை பெரிய அளவில்  குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த விலைகளை பார்க்கும் போது  மக்களுக்கு தங்கத்தின் மீது ஒரு பயம் வருகிறது.  அதனால், மக்கள் தங்கம் வாங்குவதற்கு யோசனை செய்து வருகின்றனர்.ஆனால் முதலீட்டாளர்களை பொறுத்தவரை இது  ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு பெரும்  அதிர்ச்சியாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை குறையுமா என எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web