தங்கம் அதிரடி சரிவு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மார்ச் 6ம் தேதி தங்கத்தின் விலை சற்றே சரிந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ45 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ8020க்கும், சவரனுக்கு ரூ360 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ64160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.106.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின்விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கு விற்பனையானது.
தொடர்ந்து கடந்த 2 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையானது.இன்று சரிந்திருப்பதால் நகைப்பிரியர்கள் இல்லத்தரசிகள் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் உயர்ந்து கிராம் ரூ10000க்கு விற்பனையாகலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!